Instructions

Sinhala | English

eZ Bro

கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக, சுயதொழில் செய்ய விரும்புவோருக்கும், நியமிக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் eZ Cash தொடர்பான மேற்கொள்பவர்களுக்கும் Dialog eZ Cash ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம் eZ bro ஆகும். நீங்கள் வேலை செய்கிறீர்கள், உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்துகிறீர்கள் அல்லது உங்கள் இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பைப் படிக்கிறீர்கள் என்றால், இந்த வாய்ப்பு இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றில் ஈடுபட உங்களை அனுமதிப்பதோடு அதே நேரத்தில் உங்களுக்காக ஒரு வருமானத்தை ஈட்ட உங்களுக்கு அதிகாரத்தையும் வழங்குகின்றது!

இது எப்படி செயல்படுகிறது

 • விற்பனையாளர் துரித இலக்கமான 0777456456 க்கு அழையுங்கள் அல்லது eZCashsupport@dialog.lk க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது தொடர்புடைய தகவலுடன் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். படிவத்தை அணுக இங்கே கிளிக் செய்க
  - பெயர்
  - மொபைல் இலக்கம்
  - முகவரி
  - மாவட்டம்
  - தேசிய அடையாள அட்டை இலக்கம்
  - நிறுவனம்
 • கொடுக்கப்பட்ட தகவலுடன் உங்கள் விபரங்களுடன் அந்தந்த பிராந்திய முகாமையாளர் / பிராந்திய விற்பனை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும்
 • பிராந்திய முகாமையாளர் / பிராந்திய விற்பனை ஒருங்கிணைப்பாளர் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி உங்களைப் தொடர்புக்கொண்டு திட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்வார்கள்
 • திட்டம் பற்றிய அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
 • சுமுகமான உறவின் மூலம் அந்தந்த விநியோகஸ்தர் / eDSR மூலமாகவோ அல்லது ஆன்லைன் / மொபைல் வங்கி மூலம் ஏற்பாடு செய்யக்கூடிய ஒரு Self-top-up வழியாகவோ உங்கள் eZ bro பணப்பையினை Top up செய்யுங்கள். (CEFT) - மேலும் விவரங்கள் கீழே.

eZ bro onboarding செயல்முறை

 • உங்கள் முகவரி மற்றும் வழங்கப்பட்ட பிற தகவல்களை சரிபார்க்க எங்கள் ஊழியர்களில் ஒருவர் உங்களுடன் தொடர்புகொள்வார்,
 • இந்த வருகையின் போது, எங்கள் விற்பனை பிரதிநிதிகள் மேலும் விவரங்களை உங்களுக்கு வழங்குவதோடு, eZ bro நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு சுருக்கமாகவும் தெரிவிப்பார்கள்
 • உங்கள் eZ bro பணப்பை உருவாக்கப்பட்டதும், உங்கள் பதிவை உறுதிப்படுத்த நீங்கள் SMS மற்றும் போலி கடவுச்சொல்லைப் பெறுவீர்கள்

சலுகைகள்

eZ bro க்கு (சமூக விற்பனையாளர்)

 • இதை வருமானம் ஈட்டுவதற்கும்ஃ இரண்டாம் நிலை வருமான ஆதாரமாகப் பயன்படுத்தவும் முடியும்
 • கணிசமான முதலீடு இல்லாமல் இதனை ஆரம்பிக்க முடியும். (அதாவது: ஒரு வணிகத்தைத் தொடங்க ஒரு இருப்பிடத்தை வாடகைக்கு எடுப்பது). உங்கள் முதலீடு உங்கள் eZ bro பணப்பையினை Top up செய்ய மட்டுமே தேவைப்படும்
 • சமூக இணைப்புகள், சமூக உருவம் மற்றும் அந்தஸ்தை மேம்படுத்தவும்
 • இலங்கையின் முன்னணி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சமூக தூதராகுங்கள்
 • பதிவுபெறும் போது தனித்துவமான வர்த்தக பொருட்கள்

வாடிக்கையாளருக்கு

 • விரைவான மற்றும் வசதியான ரீசார்ஜ்
 • வணிகர்களுடன் எண்களைப் பகிர்வது குறித்து குறைந்த அக்கறை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

eZ bro பணப்பைக்குள் எவ்வாறு உள்நுழைவது?
Google Play Store இல் eZ Cash விற்பனையாளர் App ஐ டவுன்லோட் செய்யலாம். உங்கள் மொபைல் இலக்கத்தை பாவனையாளர் ஐடியாகவும், உருவாக்கப்பட்ட PIN ஐ கடவுச்சொல்லாகவும் வழங்குவதன் மூலம் நீங்கள் eZ bro பணப்பைக்குள் உள்நுழையலாம்

எனது eZ bro பணப்பையினை எவ்வாறு Top-up செய்வது?
தொடங்குவதற்கு உங்கள் eZ Bro பணப்பையினை Top up செய்ய வேண்டும்.
இதனை மேற்கொள்ள பல தெரிவுகள் காணப்படுகின்றது

 • ஆன்லைன் வங்கி வழியாக Top up - செய்தல் CEFT பரிமாற்றத்தின் மூலம் ஆன்லைன் / மொபைல் வங்கி வழியாக உங்கள் eZ bro பணப்பையினை உடனடியாக top up செய்யலாம். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க
 • eZ Cash வியாபாரிகளிடம் Top up செய்தல் - நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ள 25,000 க்கும் அதிகளவான eZ Cash விற்பனையாளர்களிடமிருந்து உங்கள் பணப்பையை Top up செய்துக்கொள்ளலாம்.
 • எந்த டயலொக் சேவை நிலையத்திலும் / கிளைகளிலும் வுழி ரி செய்தல் - நீங்கள் பணத்தை ஒப்படைக்கும் போது மற்றும் உங்கள் பணப்பையை eZ Cash உடன் Top up செய்யப்படும்
 • விற்பனை பிரதிநிதியைப் பார்வையிடுல் - விற்பனை பிரதிநிதி வருகையின் போது நீங்கள் பணத்தை ஒப்படைக்கும் போது உங்கள் பணப்பையை eZ Cash உடன் Top up செய்யப்படும்

கொடுப்பனவுகள்

We run number of promotions time to time to encourage you to do more transactions and earn more money. Click here to view the latest promotions அதிக பரிவர்த்தனைகள் மேற்கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் அதிக பணம் சம்பாதிப்பதற்கும் நாங்கள் அவ்வப்போது பல கொடுப்பனவுகளை வழங்குவோம். சமீபத்திய கொடுப்பனவுகளை காண இங்கே கிளிக் செய்க